“The Lord makes poor and makes rich; he brings low and he exalts.” 1 Samuel 2:7.

All my changes come from Him who never changes. If I had grown rich, I should have seen His hand in it, and I should have praised Him; let me equally see His hand if I am made poor, and let me as heartily praise Him. When we go down in the world, it is of the Lord, and so we may take it patiently: when we rise in the world, it is of the Lord, and we may accept it thankfully. In any case, the Lord hath done it, and it is well.

It seems that Jehovah’s way is to lower those whom He means to raise and to strip those whom He intends to clothe. If it is His way, it is the wisest and best way. If I am now enduring the bringing low, I may well rejoice, because I see in it the preface to the lifting up. The more we are humbled by grace, the more we shall be exalted in glory. That impoverishment which will be overruled for our enrichment is to be welcomed.

O Lord, Thou has taken me down of late and made me feel my insignificance and sin. It is not a pleasant experience, but I pray Thee make it a profitable one to me. Oh, that Thou wouldst thus fit me to bear a greater weight of delight and of usefulness; and when I am ready for it, then grant it to me, for Christ’s sake! Amen.

உயர்த்துவதற்காக அவர் தாழ்த்துகிறார்

கர்த்தர் தரித்திரம் அடையச் செய்கிறவரும் ஐசுவரியம் அடையப்பண்ணுகிறவருமாய் இருக்கிறார். அவர் தாழ்த்துகிறவரும் உயர்த்துகிறவருமானவர். 1.சாமு.2:7.

எல்லா மாற்றங்களும் ஒருபோதும் மாறாதவராகிய அவரிடமிருந்தே வருகின்றன. நான் ஐசுவரியவான். ஆனால் அவராலேயே ஆனேன் என்று அவரைப் போற்றிப் புகழ்ந்திருக்க வேண்டும். நான் தரித்திரம் அடைந்தாலும் அவராலேயே அந்நிலை அடைந்தேன் என்று அவரைத் துதித்துப்பாட வேண்டும். உலகில் நாம் தாழ்ந்த நிலை அடைந்தால் ஆண்டவராலேயே அடைந்திருக்கிறோம் என்று பொறுமையாய் இருக்க வேண்டும். நாம் உயர்நிலை அடைந்தாலும் ஆண்டவராலேயே அந்நிலை அடைந்தோம் என்று நன்றியுடன் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். எந் நிலையானாலும் அது ஆண்டவராலேயே ஏற்பட்டது. அது நன்மையாகத்தான் இருக்கும்.

தாம் உயர்த்த நினைத்தவர்களைத் தாழ்த்துவதும் தாம் உடுத்த நினைத்தவர்களை வெறுமையாக்குவதும் யேகோவாவின் வழியென்று தோன்றுகிறது. அது அவர் வழியானால் அதுவே சிறந்ததும் ஞானமானதும் ஆகும். நான் இப்போது தாழ்த்தப்பட்டதைச் சகித்துக் கொண்டிருந்தால் நான் சீக்கிரத்தில் உயர்து;தப்படுவேன் என்று மகிழ்ச்சி அடையலாம். கிருபையினால் எவ்வளவுக்கெவ்வளவு தாழ்த்தப்படுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு மகிமையினால் உயர்த்தப்படுவோம். நாம் வளமூட்டப்படுவதற்காக உதறித்தள்ளப்போகும் வறுமை நிலையை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

ஆண்டவரே இப்போது என்னைத் தாழ்த்தி நான் பாவி என்றும் எவ்வளவு அற்பமானவன் என்றும் உணரச் செய்திருக்கிறீர். இந்த அனுபவம் என் மனதிற்கு உகந்ததல்ல. அதை எனக்கு நலந்தருகிறதாக மாற்றியருளும். இவ்விதமாக நான் மிகுந்த பயன் கொடுக்கிறவனாயும் ஆழ்ந்த இன்பத்தை அனுபவிக்கிறவனாயும் மாற்றப்பட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்! அந்நிலை அடைய நான் தகுதியுள்ளவனாயிருக்கும் போது என்னை அந்நிலை அடையச் செய்யும். கிறிஸ்துவின் மூலம் நான் வேண்டிக்கொள்ளுகிறேன். ஆமென்.

Charles H. Spurgeon