“You, Lord, are my lamp; the Lord turns my darkness into light.” 2 Samuel 22:29.
Am I in the light? Then Thou, O Lord, art my lamp. Take Thee away and my joy would be gone; but as long as Thou art with me, I can do without the torches of time and the candles of created comfort. What a light the presence of God casts on all things! We heard of a lighthouse which could be seen for twenty miles, but our Jehovah is not only a God at hand, but far off is He seen, even in the enemy’s country. O Lord, I am as happy as an angel when Thy love fills my heart. Thou art all my desire.
Am I in the dark? Then thou, O Lord, wilt lighten my darkness. Before long things will change. Affairs may grow more and more dreary and cloud may be piled upon cloud; but if it grow so dark that I cannot see my own hand, still I shall see the hand of the Lord. When I cannot find a light within me, or among my friends, or in the whole world, the Lord, who said, “Let there be light,” and there was light, can say the same again. He will speak me into the sunshine yet. I shall not die but live. The day is already breaking. This sweet text shines like a morning star. I shall clap my hands for joy ere many hours are passed.
இருளில் வெளிச்சம்
கர்த்தராகிய தேவரீர் என் விளக்காயிருக்கிறீர். கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குகிறவர். 2.சாமு.22:29.
நான் வெளிச்சத்தில் இருக்கிறேனா? அப்படியானால் தேவரீரே நீர் ஏன் விளக்காயிருக்கிறீர்? நீர் என்னை விட்டுச் சென்றுவிட்டால் என் மகிழ்ச்சியும் நீங்கிவிடும். நீர் என்னோடு இருக்கும் வரை காலம் என்னும் கைப்பந்தமாவது வசதிக்காக நான் ஏற்படுத்திக் கொள்ளும் மெழுகுவர்த்தி போன்றவையாவது எனக்குத் தேவையில்லை. கடவுளின் பிரசன்னம் எல்லாவற்றின் மேலும் எவ்வளவு சிறப்பாக ஒளிவீசுகிறது! இருபது மைலுக்கு அப்பால் கூட வெளிச்சம் காட்டும் கலங்கரை விளக்கம் பற்றி அறிந்துள்ளோம். ஆனால் யேகோவா நம் அருகிலேயே இருப்பவராய் மட்டும் அல்லாமல் தூரத்தில் உள்ள நம் பகைவரின் நாட்டில் கூட நாம் பார்க்கக் கூடியவராய் இருக்கின்றார். ஆண்டவரே உன் அன்பு என் இதயத்தை நிரப்பும் போது நான் தேவதூதனைப்போல் மகிழ்ச்சி அடைகிறேன். நான் உம்மையே தான் விரும்புகிறேன்.
நான் இருளில் இருக்கிறேனா? அப்படியானால் கர்த்தராகிய நீர் என் இருளை வெளிச்சம் ஆக்குவீர். கூடிய சீக்கிரத்தில் எல்லாம் மாறுதலடையும். விவகாரங்கள் மேலும் மேலும் துயர் நிறைந்தவை ஆகலாம், துன்பங்களாகிய மேகங்கள் ஒன்றோடொன்று சேரலாம். ஆனால் என் கையைக்கூட நான் பார்க்க முடியாத இருள் சூழுமே. ஆனால் ஆண்டவருடைய கையை நான் பார்க்கு முடியும். எனக்குள்ளேயாவது என் நண்பர்களுக்குள்ளேயாவது உலகிலாவது நான் வெளிச்சம் காணமுடியாமற் போனாலும் வெளிச்சம் உண்டாகக் கடவது என்று சொல்லி வெளிச்சத்தை உண்டாக்கின ஆண்டவர் மறுபடியும் அவ்விதம் சொல்லக்கூடும். அவர் இப்போதும் நான் வெளிச்சத்தில் இருக்கச் செய்ய முடியும். நான் மரணமடையாமல் உயிரோடு இருப்பேன். பொழுது விடிந்து கொண்டிருக்கிறது. அதைக் குறித்த இனிய வேதவசனம் விடிவெள்ளிபோல் பிரகாசிக்கிறது. சீக்கிரத்தில் நான் மகிழ்ச்சியால் கைதட்டுவேன்.
Charles H. Spurgeon