But I will have mercy upon the house of Judah, and will save them by the Lord their God, and will not save them by bow, nor by sword, nor by battle, by horses, nor by horsemen. Hosea 1:7.

Precious word. Jehovah Himself will deliver His people in the greatness of His mercy, but He will not do it by the ordinary means, Men are slow to render to God the glory due unto His name. If they go to battle with sword and bow and win the victory, they ought to praise their God; yet they do not, but begin to magnify their own right arm and glory in their horses and horsemen. For this reason our Jehovah often determines to save His people without second means, that all the honor may be to Himself alone.

Look, then, my heart, to the Lord alone and not to man. Expect to see God all the more clearly when there is no one else to look to. If I have no friend, no adviser, no one at my back, let me be none the less confident if I can feel that the Lord Himself is on my side; yea, let me be glad if He gives victory without battle, as the text seems to imply. Why do I ask for horses and horsemen if Jehovah Himself has mercy upon me and lifts up His arm for my defense! Why need I bow or sword if God will save? Let me trust and not be afraid from this day forth and for evermore. Amen.

போரின்றி வெற்றி

யூதாவின் வம்சத்தாருக்கோ நான் இரக்கஞ்செய்வேன். வில்லினாலும், பட்டயத்தினாலும், யுத்தத்தினாலும், குதிரைகளினாலும், குதிரை வீரரினாலும் நான் அவர்களை இரட்சியாமல், அவர்களுடைய தேவனாகிய கர்த்தரினாலே அவர்களை இரட்சிப்பேன் என்றார். ஓசி.1:7.

தம் மிகுந்த இரக்கத்தினால் யேகோவாவே தம் மக்களை இரட்சிப்பார் என்பது மதிப்பு மிக்க வார்த்தையாகும். ஆனால் பொதுவாகப் பயன்படுத்தப்படும் முறைகளை அவர் உபயோகிக்க மாட்டார். கடவுளின் நாமத்திற்கு ஏற்ற மகிமையைக் கொடுக்க மக்கள் தாமதிக்கிறார்கள். அவர்கள் பட்டயத்தோடும் வில்லோடும் போருக்குச்சென்று வெற்றி பெற்றால் கடவுளை மகிமைப்படுத்த வேண்டும், ஆனால் அவர்கள் அப்படிச் செய்வதில்லை. தங்கள் வலது கைகளை மகிமைப்படுத்தி, தங்கள் குதிரைகளையும் குதிரை வீரரையும் குறித்துப் பெருமை கொள்ளுகிறார்கள். ஆகவே எல்லா மகிமையும் தம்மையே சேரவேண்டுமென்று யேகோவா தம் மக்களை வேறுவிதமாக இரட்சிக்கத் தீர்மானிக்கிறார்.

என் ஆன்மாவே மனிதரையல்லாமல் ஆண்டவரையே நோக்கிப் பார். நோக்கிப் பார்ப்பதற்கு வேறு யாரும் இல்லாதபோது கடவுளை வெகு தெளிவாகப் பார்க்கமுடியும் என்று எதிர்பார்த்திரு. என்னைத் தாங்குபவரும் ஆலோசனை கொடுப்பவருமாக எந்த நண்பரும் இல்லையென்றாலும், ஆண்டவர் மட்டுமே என்பக்கம் இருந்தாலும் நான் நம்பிக்கை இழக்காமல் இருப்பேனாக! மேலே கூறப்படும் வசனத்தில் சொல்லியிருப்பது போல அவர் போரின்றி வெற்றி கொடுத்தாலும் மகிழ்ச்சி அடைவேனாக! யேகோவாவே என் மேல் இரக்கம் கொண்டு என்னைப் பாதுகாக்க அவர் கரத்தை உயர்த்தும் போது நான் ஏன் குதிரைகளும் குதிரை வீரர்களும் வேண்டுமென்று கேட்கவேண்டும்? இந்த நாளிலிருந்து இனிவரும் நாட்களிலெல்லாம் நான் பயமில்லாமல் நம்பிக்கையுடன் இருப்பேனாக!

Charles H. Spurgeon