“But when he, the Spirit of truth, comes, he will guide you into all the truth. He will not speak on his own; he will speak only what he hears, and he will tell you what is yet to come.” John 16:13.
Truth is like a vast cavern into which we desire to enter, but we are not able to traverse it alone. At the entrance it is clear and bright; but if we would go further and explore its innermost recesses, we must have a guide, or we shall lose ourselves. The Holy Spirit, who knows all truth perfectly, is the appointed guide of all true believers, and He conducts them as they are able to bear it, from one inner chamber to another, so that they behold the deep things of God, and His secret is made plain to them.
What a promise is this for the humbly inquiring mind! We desire to know the truth and to enter into it. We are conscious of our own aptness to err, and we feel the urgent need of a guide. We rejoice that the Holy Spirit is come and abides among us. He condescends to act as a guide to us, and we gladly accept His leadership. “All truth” we wish to learn, that we may not be one-sided and out of balance. We would not be willingly ignorant of any part of revelation lest thereby we should miss blessing or incur sin. The Spirit of God has come that He may guide us into all truth: let us with obedient hearts hearken to His words and follow His lead. நம் வழிகாட்டியின் தலைமையில்
சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார். யோ.16:13.
சத்தியம் என்பது பரந்தகன்ற ஒரு குகை போன்றது. அதற்குள் நுழைய நமக்கு விருப்பம் உண்டு. ஆனால் அதைத் தனியாகக் கடக்க நமக்கு முடியவில்லை. அதன் நுழைவாயில் தெளிவும் ஒளிமிக்கதாயும் இருக்கிறது. ஆனால் நாம் அதன் உள்ளேபோய் உள்ளிடத்தை ஆராயவேண்டுமானால் நமக்கு ஒரு வழிகாட்டி தேவை. இல்லையென்றால் நாம் வழிதவறிப் போய்விடுவோம். எல்லா சத்தியங்களையும் முழுவதுமாய் அறிந்த பரிசுத்த ஆவியே உண்மையான விசுவாசிகளுக்கென்று ஏற்படுத்தப்பட்ட வழிகாட்டி ஆவார். அவரே அவர்கள் ஆற்றலுக்கு ஏற்றவாறு அவர்கள் கடவுளைப்பற்றி ஆழ்ந்தவற்றைக் கண்டறியவும், ஓர் உள் அறையிலிருந்து அடுத்த அறைக்காக அவர்களை அழைத்துச் செல்கிறார்.
தாழ்மையாக விவரங்களை ஆராய விரும்புகிறவர்களுக்கு இது எவ்வளவு சிறந்த வாக்குறுதியாகும் என்று நினைத்துப்பாருங்கள். நாம் சத்தியத்தை அறிந்துகொள்ளவும் அதன்படி நடக்கவும் விரும்புகிறோம். நாம் தவறு செய்யக்கூடியவர்கள் என்பதை அறிந்திருக்கிறோம். ஆகவே ஒரு வழிகாட்டி நமக்கு உடனே தேவை என்று உணருகிறோம். பரிசுத்த ஆவியானவர் வந்துவிட்டார் என்றும் நம்மோடு நிலைத்திருக்கிறார் என்றும் மகிழ்ச்சி அடைகிறோம். நமக்கு வழிகாட்டியாக இருக்க அவர் ஆதரவு காட்டுகிறார். அவர் நமக்குத் தலைவராக இருப்பதை நாம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறோம். நாம் ஒரு சார்பானவர்களாயும், சமநிலையிலிருந்து விலகிவிடுகிறவர்களாயும் இராதபடி சகல சத்தியத்தையும் கற்றுக்கொள்ள விரும்புகிறோம். ஆண்டவர் வெளிப்படுத்துகிறவர்களை வேண்டுமென்றே நாம் அறியாதவர்களாயிருக்கமாட்டோம். ஏனெனில் நாம் அப்படியிருப்பதினால் ஏதாவது ஆசீர்வாதத்தை இழந்து விடுவோமோ அல்லது பாவஞ்செய்துவிடுவோமோ என்னும் பயம் உள்ளவர்களாயிருக்கிறோம். நம்மை எல்லா சத்தியத்திற்குள்ளும் நடத்த கடவுளின் ஆவியானவர் வந்து விட்டார். நாம் அவருக்குக் கீழ்ப்படிந்து, அவர் சத்தியத்தைக் கேட்டு, அவர் நடத்தும் பாதையில் செல்வோமாக!
Charles H. Spurgeon