“Your sorrow shall be turned into joy.” John 16:20.

Their particular sorrow was the death and absence of their Lord, and it was turned into joy when He rose from the dead and showed Himself in their midst. All the sorrows of saints shall be thus transmuted, even the worst of them, which look as if they must forever remain fountains of bitterness.

Then the more sorrow, the more joy. If we have loads of sorrow, then the Lord’s power will turn them into tons of joy. Then the bitterer the trouble the sweeter the pleasure: the swinging of the pendulum far to the left will cause it to go all the farther to the right. The remembrance of the grief shall heighten the flavor of the delight: we shall set the one in contrast with the other, and the brilliance of the diamond shall be the more clearly seen because of the black foil behind it.

Come, my heart, cheer up! In a little while I shall be as glad as I am now gloomy. Jesus tells me that by a heavenly alchemy my sorrow shall be turned into joy. I do not see how it is to be, but I believe it, and I begin to sing by way of anticipation. This depression of spirit is not for long; I shall soon be up among the happy ones who praise the Lord day and night, and there I shall sing of the mercy which delivered me out of great afflictions.

பரலோக இரசவாதம்

உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும். யோ.12:20.

அவர்களுக்கு ஏற்பட்ட துக்கம் அவர்கள் ஆண்டவர் மரித்ததனாலும் அவர்களை விட்டுப்போய் விட்டதனாலும் ஏற்பட்டது. ஆனால் அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து அவர்கள் மத்தியில் உயிர் உள்ளவராகத் தம்மை வெளிப்படுத்திய பொழுது அது மகிழ்ச்சியாக மாறியது. இவ்விதமே பரிசுத்தவான்களின் துக்கமெல்லாம் மாற்றப்படும். அவைகளில் மிகவும் பயங்கரமானவைகளாக நித்திய காலமாய்க் கசப்பின் ஊற்றுக்களாய் நிலைத்திருப்பவை போல் காணப்படுபவை கூட மாற்றப்படும்.

துக்கம் எவ்வளவுக்கு அதிகமாய் இருக்கிறதோ அவ்வளவுக்கு அதிகமாய் மகிழ்ச்சி பெருகும். நமக்கு மூட்டை மூட்டையாய்த் துக்கம் இருக்குமேயானால் அவை வண்டிக் கணக்காக மகிழ்ச்சியாய் மாறும். நம் தொல்லை எவ்வளவு கசப்பானதாய் இருக்கிறதோ, அவ்வளவு இனிமையானதாய் மாறும். கடிகாரத்தின் ஊசற்குண்டு இடது பக்கம் எவ்வளவு தூரம் போகிறதோ அவ்வளவு தூரம் வலது பக்கமும் போகும். துயரத்தைப் பற்றிய நினைவு பின்னால் வரும் மகிழ்ச்சியைப் பல மடங்காக்கும். துக்கத்தையும் மகிழ்ச்சியையும் நாம் நினைத்துப் பார்க்கும் பொழுது வைரம் கூட அதன் கீழே வைக்கப்பட்டிருக்கும் கறுப்பு உலோகத் தாளினால் தெளிவாகப் பார்க்கக் கூடியதாகிறது என்பதை அறியவேண்டும்.

என் இதயமே உற்சாகம் கொள். இன்னும் சிறிது காலத்திற்கு அப்புறம் நான் இப்பொழுது எவ்வளவுக்கெவ்வளவு மனச்சோர்வு உற்றிருக்கிறேனோ, அவ்வளவுக்கவ்வளவு மகிழ்ச்சியடைவேன். பரலோக இரசவாதத்தினால் என் துக்கம் மகிழ்ச்சியாக மாற்றப்படும் என்று இயேசு சொல்கிறார். அது எவ்விதம் நடைபெறும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அதை நான் நம்பி அது நடைபெறும் என்று எதிர்பார்த்து இப்போதே பாடத் தொடங்குகிறேன். என் மனத்தளர்ச்சி அதிககாலம் நீடிக்காது. கூடிய சீக்கிரத்தில் நான் ஆண்டவரை இரவும் பகலும் பாடித்துதிக்கும் கூட்டத்தாரோடு சேர்ந்து என் துக்கத்திலிருந்து எனக்கு விடுதலை அளித்த கிருபையைப் போற்றித் துதிப்பேன்.

Charles H. Spurgeon