“The Lord will send a blessing on your barns and on everything you put your hand to. The Lord your God will bless you in the land he is giving you.” Deuteronomy 28:8.
If we obey the Lord our God He will bless that which He gives us. Riches are no curse when blessed of the Lord. When men have more than they require for their immediate need and begin to lay up in storehouses, the dry rot of covetousness or the blight of hard-heartedness is apt to follow the accumulation; but with God’s blessing it is not so. Prudence arranges the saving, liberality directs the spending, gratitude maintains consecration, and praise sweetens enjoyment. It is a great mercy to have God’s blessing in one’s iron safe and on one’s banking account.
What a favor is made ours by the last clause! “The Lord shall bless thee in all that thou settest thine hand unto.” We would not put our hand to anything upon which we dare not ask God’s blessing, neither would we go about it without prayer and faith. But what a privilege to be able to look for the Lord’s help in every enterprise! Some talk of a lucky man: the blessing of the Lord is better than luck. The patronage of the great is nothing to the favor of God. Self-reliance is all very well; but the Lord’s blessing is infinitely more than all the fruit of talent, genius, or tact.
தேவன் ஆசீர்வதிக்கக் கூடியவைகளைச் செய்
கர்த்தர் உன் களஞ்சியங்களிலும் நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார். உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார். உபா.28:8.
நம் தேவனாகிய கர்த்தருக்கு நாம் கீழ்ப்படிந்தால் அவர் நமக்குக் கொடுப்பதை ஆசீர்வதிப்பார். செல்வம் ஆண்டவரால் ஆசீர்வதிக்கப்படும் போது அது சாபமாயிராது. அவசரத் தேவையானதற்கு அதிகமாக மக்களுக்கு இருக்கும் போது அவர்கள் அதைக் களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறார்கள். அப்போது இச்சையும் இருதய கடினமாகிய வெப்பு நோயும் அவற்றைத் தாக்குகின்றன. ஆனால் ஆண்டவரின் ஆசீர்வாதம் இருந்தால் அவ்விதம் நேரிடாது. முன்மதியுடன் சேமித்து வைப்போம். வள்ளன்மையோடு செலவு செய்வோம். நன்றியறிதல் அதைச் சரியான பணிக்கென நேர்ந்து விடச் செய்கிறது. கடவுளைத் துதித்துக் கொண்டே அதைச் செலவு செய்வோம். நம்முடைய சேமிப்புப் பெட்டகத்திலும் வங்கிக் கணக்கிலும் ஆண்டவரின் ஆசீர்வாதம் இருப்பது பெரிய கிருபையாகும்.
நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார் என்பது எவ்வளவு சிறந்த கருணையாகும். ஆண்டவர் ஆசீர்வதிக்க வேண்டுமென்று கேட்கக் கூடாத எந்த வேலையையும் நாம் செய்யத் தொடங்கவும் மாட்டோம். ஜெபம் செய்யாமலும் நம்பிக்கை இல்லாமலும் அதைச் செய்யவும் மாட்டோம். ஒவ்வொரு வேலையிலும் ஆண்டவரின் உதவியை எதிர்பார்ப்பது எவ்வளவு சிறந்த ஒரு வாய்ப்பாகும்! சிலர் அதிஷ்டமுள்ள மக்களைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் அதிஷ்டத்தை விட ஆண்டவரின் ஆசீர்வாதம் மேலானது. ஆண்டவரின் கருணையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் பெரியவர்களின் ஆதரவு ஒன்றுமில்லாததே ஆகும். தன்னம்பிக்கை நல்லதுதான் ஆனால் ஆண்டவரின் ஆசீர்வாதம் சிறப்பான வரங்கள் கூர்மதி சாமர்த்தியம் எல்லாவற்றிலும் அடையும் பயன்களை விடச் சிறந்தது.
Charles H. Spurgeon