“Whoever walks in integrity walks securely, but whoever takes crooked paths will be found out.” Proverbs 10:9.
His walk may be slow, but it is sure. He that hasteth to be rich shall not be innocent nor sure; but steady perseverance in integrity, if it does not bring riches, will certainly bring peace. In doing that which is just and right, we are like one walking upon a rock, for we have confidence that every step we take is upon solid and safe ground. On the other hand, the utmost success through questionable transactions must always be hollow and treacherous, and the man who has gained it must always be afraid that a day of reckoning will come, and then his gains will condemn him.
Let us stick to truth and righteousness. By God’s grace let us imitate our Lord and Master, in whose mouth no deceit was ever found. Let us not be afraid of being poor, nor of being treated with contempt. Never, on any account whatever, let us do that which our conscience cannot justify. If we lose inward peace, we lose more than a fortune can buy. If we keep in the Lord’s own way and never sin against our conscience, our way is sure against all comers. Who is he that can harm us if we be followers of that which is good? We may be thought fools by fools if we are firm in our integrity; but in the place where judgment is infallible we shall be approved.
சரியாக நடப்பதற்கு ஏற்ற பாங்கு
உத்தமமாய் நடக்கிறவன் பத்திரமாய் நடக்கிறான். நீதி.10:9.
அவன் மெதுவாய் நடக்கலாம். ஆனால் பத்திரமாய் நடப்பான். விரைவாகப் பணக்காரனாகப் பிரயாசப்படுகிறவன் குற்றமற்றவனாயும் பத்திரமாய் நடப்பவனாயும் இருக்க முடியாது. உண்மையாய் நடக்க விடா முயற்சியுடன் பிரயாசப்படுகிறவன் செல்வந்தன் ஆகாவிட்டாலும் சமாதானம் உள்ளவனாயிருப்பான். நாம் நீதியும் நேர்மையுமானவைகளைச் செய்தால், பாறையின்மேல் நடக்கிறவர்களைப் போல் இருப்போம். ஏனெனில் நாம் வைக்கும் ஒவ்வொரு அடியும் கெட்டியானதும், பத்திரமானதுமான தரையில் வைப்பதாயிருக்கும் என்று நாம் நிச்சயமாய் நம்பலாம். ஆனால் தவறான தொழில் முறைகளினால் நாம் அடையும் சிறப்பான வெற்றியும் வெறுமையானதும் நம்பிக்கைத் துரோகமானதும் ஆகும். அதை அடைந்தவனும் பழிவாங்க வேண்டிய நாள் வரும்போது அவன் இலாபமாக அடைந்த பொருளெல்லாம் அவனைக் குற்றவாளியெனத் தீர்க்கும் என்ற அச்சத்துடனேயே இருப்பான்.
நாம் உண்மையும் நியாயமுமானவற்றைச் செய்வோமாக! வாயில் வஞ்சனையே வராத நம் ஆண்டவரும் எஜமானும் ஆனவரையே கடவுளின் கிருபையினால் நாம் பின் பற்றுவோமாக! வறுமையைக் குறித்தாவது மற்றவர்களின் ஏளனத்தைக் குறித்தாவது நாம் அஞ்சாதிருப்போமாக! நம் மனச்சாட்சி நேர்மையென விளக்காததை ஒருநாளும் செய்யாதிருப்போமாக! மனஅமைதியை நாம் இழப்போமேயானால் விலை கொடுத்து வாங்க முடியாத செல்வத்தை இழந்தவர்களாவோம். நாம் ஆண்டவரின் வழியே சென்று நம் மனச்சாட்சிக்கு விரோதமாகப் பாவம் செய்யாதிருப்போமேயானால் யார் வந்தாலும் நாம் பத்திரமாய் இருப்போம். நாம் நன்மையானவைகளைப் பின்பற்றுகிறவர்களாய் இருப்போமேயானால் யார் நமக்குத் தீங்கு செய்ய முடியும்? நாம் வாய்மையில் உறுதியாய் இருந்தால் மூடர் நம்மை மூடர் என்று நினைத்துக் கொள்வார்கள். ஆனால் பிழையாத நியாயப்படி நாம் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களாயிருப்போம்.
Charles H. Spurgeon