“I will make them a covenant of peace, and will cause the evil beasts to cease out of the land: and they shall dwell safely in the wilderness, and sleep in the woods.” Ezekiel 34:25.
It is the height of grace that Jehovah should be in covenant with man, a I feeble, sinful, and dying creature. Yet the Lord has solemnly entered into a faithful compact with us, and from that covenant He will never turn aside. In virtue of this covenant we are safe. As lions and wolves are driven off by shepherds, so shall all noxious influences be chased away. The Lord will give us rest from disturbers and destroyers; the evil beasts shall cease out of the land. O Lord, make this Thy promise good even now!
The Lord’s people are to enjoy security in places of the greatest exposure: wilderness and woods are to be as pastures and folds to the flock of Christ. If the Lord does not change the place for the better, He will make us the better in the place. The wilderness is not a place to dwell in, but the Lord can make it so; in the woods one feels hound to watch rather than to sleep, and yet the Lord giveth His beloved sleep even there. Nothing without or within should cause any fear to the child of God. By faith the wilderness can become the suburbs of heaven and the woods the vestibule of glory.
எல்லா நிலையிலும் சமாதானம்
நான் அவர்களோடு சமாதான உடன்படிக்கைசெய்து, துஷ்ட மிருகங்களை தேசத்தில் இராதபடிக்கு ஒழியப் பண்ணுவேன். அவர்கள் சுகமாய் வனாந்தரத்தில் தாபரித்து, காடுகளில் நித்திரைபண்ணுவார்கள். எசேக்.34:25.
ஆற்றல் அற்றவனும், பாவியும் மரிக்கவேண்டிய தன்மை உள்ளவனுமான மனிதனோடு யேகோவா உடன்படிக்கை செய்வது கிருபையின் உச்சநிலையாகும். ஆயினும் ஆண்டவர் நம்மோடு திட்டமிட்டுச் செய்யப்பட்டவிதமாக உடன்படிக்கை செய்திருக்கிறார். இந்த உடன்படிக்கையினால் நாம் பத்திரமாக இருக்கிறோம். மேய்ப்பர்களால் சிங்கங்களும் ஓநாய்களும் விரட்டியடிக்கப்படுவதுபோல எல்லா நச்சுத்தன்மை வாய்ந்த சக்திகளும் விரட்டியடிக்கப்படும். அமைதியைக் குலைக்கக் கூடியவர்களிடமிருந்தும், அழிக்கக்கூடியவர்களிடமிருந்தும் ஆண்டவர் நமக்கு இளைப்பாறுதல் அளிப்பார். நாட்டில் தீய விலங்குகள் இல்லாமற்போகும். ஆண்டவரே, இப்போதே அந்த வாக்குறுதியை உண்மையாக்கும்.
இடர்காப்பின்மையான இடங்களிலும் ஆண்டவரின் மக்கள் பத்திரமாய்க் காக்கப்படுவார்கள். கிறிஸ்துவின் மந்தைக்கு வனாந்தரவெளியும், காடுகளும், மேய்ச்சல் நிலமும் ஆடுகள் அடைக்கப்படும் பட்டியும்போல இருக்கும். ஆண்டவர் இதைவிட நல்ல நடத்தை நமக்கு மாற்றிக்கொடுக்காவிட்டால் இந்த இடத்திலேயே நம்மை சிறப்புமிக்கவர் ஆக்குவார். வனாந்தர வெளி வாழ்வதற்கு ஏற்ற இடமல்ல. ஆனால் ஆண்டவர் அதை ஏற்றதாக்கக்கூடியவர். காடுகளில் தூங்குவதைவிட விழிப்புநிலையில் காவல் காப்பதிலேயே நாம் கவனம் செலுத்துவோம். ஆனால் அந்த இடத்திலேயும் ஆண்டவர் தமக்கு அருமையானவர்களுக்கு நித்திரை அருளுகிறார். ஆண்டவரின் பிள்ளைக்கு உள்ளேயும் வெளியேயும் எந்த இடத்திலும் அச்சம் கொடுக்கக்கூடியது எதுவுமில்லை. விசுவாசத்தினால் வனாந்தரவெளி பரலோகத்தின் புறநகராகவும், காடுகள் மகிமையின் முன்கூடமாகவும் மாறக்கூடும்.
Charles H. Spurgeon