“Blessed are you, Israel! Who is like you, a people saved by the Lord? He is your shield and helper and your glorious sword. Your enemies will cower before you, and you will tread on their heights.”(Deuteronomy 33:29)
That archenemy, the devil, is a liar from the beginning; but he is so very plausible that, like mother Eve, we are led to believe him. Yet in our experience we shall prove him a liar.
He says that we shall fall from grace, dishonor our profession, and perish with the doom of apostates; but, trusting in the Lord Jesus, we shall hold on our way and prove that Jesus loses none whom His Father gave Him. He tells us that our bread will fail, and we shall starve with our children; yet the Feeder of the ravens has not forgotten us yet, and He will never do so, but will prepare us a table in the presence of our enemies.
He whispers that the Lord will not deliver us Out of the trial which is looming in the distance, and he threatens that the last ounce will break the camel’s back. What a liar he is! For the Lord will never leave us or forsake us. “Let him deliver him now!” cries the false fiend: but the Lord will silence him by coming to our rescue.
He takes great delight in telling us that death will prove too much for us. “How wilt thou do in the swelling of Jordan?” But there also he shall prove a liar unto us, and we shall pass through the river singing psalms of glory.
பாட்டுக்களோடு யோர்தானுக்கு அப்பால்
உன் சது;துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள். உபா.33:29.
முதல் எதிரியாகிய பிசாசு ஆதியிலிருந்தே பொய் பேசுபவன். ஆயினும் அவன் எளிதில் நம்பத்தகுந்தவனாயிருப்பதால் ஏவாளைப்போல் நாமும் அவனை நம்பிவிடுகிறோம். ஆனால் நாம் அனுபவமடைந்தபின் அவன் பொய்யன் என்று அறிவோம்.
நாம் கிருபையிலிருந்து நழுவி விடுவோமென்றும், நம் தொழிலைக் கனவீனப்படுத்தி விடுவோம் என்றும் சமயப்பகைவரின் தண்டனைத் தீர்ப்புப்படி அழிந்துவிடுவோமென்றும் அவன் சொல்லுகிறான். ஆனால் ஆண்டவர் இயேசுவில் நம்பிக்கை வைத்தவர்களாய் நாம் சரியான பாதையில் சென்று, பிதா அவருக்குக் கொடுத்தவர்களில் ஒருவரையும் அவர் இழந்து விடவில்லை என்பதை மெய்ப்பிப்போம். பிசாசு நமக்கு உணவு கிடைக்காது என்றும் நம் பிள்ளைகளோடு நாம் பட்டினி கிடப்போம் என்றும் சொல்லுகிறான். ஆனால் காகத்திற்கும் உணவு அளிப்பவர் நம்மை இன்னும் மறந்து விடவில்லை. நம்மை ஒருநாளும் மறக்கவும் மாட்டார். நம் பகைவருக்கும் எதிரே நமக்கு ஒரு பந்தியை ஆயத்தம் பண்ணுவார்.
தூரத்தில் காணப்படும் சோதனையிலிருந்து ஆண்டவர் நம்மை விடுவிக்கமாட்டார் என்று அவன் நம் காதில் இரகசியமாகச் சொல்லி, கடைசியாக வரப்போகும் சோதனை நம்மை நிலைகுலையப் பண்ணிவிடும் என்று பயப்படுத்துகிறான். அவன் எப்படிப்பட்ட பொய்யன் என்று பாருங்கள்! ஆண்டவர் நம்மைவிட்டு விலகுவதுமில்லை, நம்மைக் கைவிடுவதுமில்லை. பொய்பேசும் பிசாசு இப்போது அவனை விடுவிக்கட்டும் என்கிறான். ஆனால் ஆண்டவர் நம்மை விடுவிக்க விரைந்து வந்து, அவன் வாயை அடக்கி விடுவார்.
மரணம் நமக்குத் தாங்க முடியாததாய் இருக்கும் என்று சொல்வதில் அவன் மகிழ்ச்சி அடைகிறான். பெருக்கெடுத்தோடும் யோர்தானின் தண்ணீரில் என்ன செய்வாய்? என்று அவன் கேட்கிறான். இதிலும் அவன் பொய்யனே. நாம் மகிமையான கீதங்களைப்பாடிக் கொண்டு ஆற்றைக் கடந்து செல்வோம்.
Charles H. Spurgeon