“For the mountains may depart and the hills be removed, but my steadfast love shall not depart from you, and my covenant of peace shall not be removed,” says the Lord, who has compassion on you. Isaiah 54:10.
One of the most delightful qualities of divine love is its abiding character. The pillars of the earth may be moved out of their places, but the kindness and the covenant of our merciful Jehovah never depart from His people. Row happy my soul feels in a firm belief of this inspired declaration! The year is almost over, and the years of my life are growing few, but time does not change my Lord. New lamps are taking the place of the old; perpetual change is on all things, but our Lord is the same. Force over turns the hills, but no conceivable power can affect the eternal God. Nothing in the past, the present, or the future can cause Jehovah to be unkind to me.
My soul, rest in the eternal kindness of the Lord, who treats thee as one near of kin. Remember also the everlasting covenant. God is ever mindful of it?see that thou art mindful of it too. In Christ Jesus the glorious God has pledged Himself to thee to be thy God and to hold thee as one of His people. Kindness and covenant-dwell on these words as sure and lasting things which eternity itself shall not take from thee.
அவர் இரக்கமும் உடன்படிக்கையும்
மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என்கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார். ஏசா.54:10.
தெய்வீக அன்பின் மிகச்சிறந்த அம்சம் அதன் நிலைத்திருக்கும் தன்மையே ஆகும். உலகைத் தாங்கி நிற்கும் தூண்கள் அவை இருக்கும் இடத்திலிருந்து நிலை பெயர்ந்து விடலாம். ஆனால் இரக்கமுள்ள யேகோவாவின் கருணையும் உடன்படிக்கையும் அவர் மக்களை விட்டு ஒருபோதும் அகன்றுவிடா. தெய்வீக உள்ளுக்கம் பெற்ற இந்த ஊறுதிமொழியை உறுதியாய் நம்புவதால் என் ஆன்மா எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறது! இந்த ஆண்டு முடியப்போகிறது. என் வாழ்க்கையின் ஆண்டுகளும் குறைந்து கொண்டே வருகின்றன. ஆனால் காலத்தினால் என் ஆண்டவர் மாறுவதில்லை. பழைய விளக்குகளின் இடத்தில் புதிய விளக்குகள் வருகின்றன. எல்லாவற்றிலும் மாறுதல் ஏற்பட்டுக்கொண்டேயிருக்கிறது. ஆனால் ஆண்டவர் மாறாதவராயிருக்கிறார். குன்றுகள் இயற்கை ஆற்றல் குன்றினால் நிலை பெயர்ந்து விடுகின்றன. ஆனால் கருதத்தக்க எந்த சக்தியும் நித்தியமான கடவுளின் நிலையை மாற்ற முடியாது. இறந்தகால நிகழ்கால எதிர்கால சம்பவம் எதுவும் யேகோவாவை என்மீது இரக்கம் அற்றவர் ஆக்க முடியாது.
என் ஆத்துமாவே, அவர் நெருங்கிய உறவினர் போல் உன்னை நடத்தும் ஆண்டவரின் நித்திய இயக்கத்தின் நிச்சயத்தில் அமர்ந்திரு. நித்திய உடன்படிக்கையையும் நினைவில் வைத்திரு. கடவுள் எப்பொழுதும் அதை நினைத்திருக்கிறார். நீயும் அதை நினைத்திருக்கக் கவனமாயிரு. மகிமையுள்ள கடவுள் இயேசு கிறிஸ்துவில் தாம் உன் கடவுளாக இருப்பதாகவும், உன்னைத் தம் மக்களில் ஒருவராக வைத்திருப்பதாகவும் வாக்குறுதி அளித்திருக்கிறார். இந்த வாக்குறுதியை இரக்கமும் உடன்படிக்கையும் உறுதி செய்திருப்பதால் நித்திய காலமாய் அது உன்னிடமிருந்து எடுபடாது.
Charles H. Spurgeon