“He will deliver you from six troubles; in seven no evil[a] shall touch you.” Job 5:19.
Eliphaz in this spoke the truth of God. We may have as many troubles as the workdays of the week, but the God who worked on those six days will work for us till our deliverance is complete. We shall rest with Him and in Him on our Sabbath. The rapid succession of trials is one of the sorest tests of faith. Before we have recovered from one blow it is followed by another and another till we are staggered. Still, the equally quick succession of deliverances is exceedingly cheering. New songs are rung out upon the anvil by the hammer of affliction, till we see in the spiritual world the antitype of “the Harmonious Blacksmith.” Our confidence is that when the Lord makes our trials six, six they will be and no more.
It may be that we have no rest day, for seamen troubles come upon us. What then? “In seven there shall be no evil touch thee.” Evil may roar at us, but it shall be kept at more than arm’s length and shall not even touch us. Its hot breath may distress us, but its little finger cannot be laid upon us.
With our loins girt about us, we will meet the six or the seven troubles and leave fear to those who have no Father, no Savior, and no Sanctifier.
வரையறைக்குட்படாத விடுதலை
ஆறு இக்கட்டுகளுக்கு உம்மை நீங்கலாக்குவார் ஏழாவதிலும் பொல்லாப்பு உம்மைத் தொடாது. யோபு 5:19.
எலிப்பாஸ் இங்கு கடவுளைப்பற்றிய உண்மையைக் கூறுகிறார். வாரத்தின் ஒவ்வொரு நாளும் நமக்குத் தொல்லைகள் ஏற்படலாம். ஆனால் அந்த ஆறு நாட்களும் கிரியை செய்த ஆண்டவர் நாம் முழுவதுமாக விடுதலை அடையும் வரை கிரியை செய்வார். ஓய்வு நாளில் நாம் அவரில் அவரோடு இளைப்பாறுவோமாக! தொடர்ந்து விரைந்து வரும் தொல்லைகள் நம் விசுவாசத்தைக் கடுமையாகச் சோதிக்கும் முறைகளில் ஒன்றாகும். ஒரு அடியிலிருந்து நாம் மீழு முன் மறுஅடி விழுந்து விடுகிறது. இவ்விதம் தள்ளாடும் வரை அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கின்றன. ஆயினும் தொடர்ந்து அதேவேகத்தில் நமக்குக் கிடைக்கும் விடுதலை நம்மை உற்சாகப்படுத்துகிறது. கடவுளை ஒரு கருமானாக நினைத்துக் கொண்டால் அவர் சம்மட்டியால் அடிக்கும் அடிகள் ஆன்மீக உலகில் சிறந்த பண்ணோசை எழும்பும் வரை துன்பம் என்னும் சம்மட்டி பட்டடைக் கல்லைத் தாக்கும் போதெல்லாம் புதுப்புதுப் பாட்டுக்களின் ஒலி எழும்பிக் கொண்டே இருக்கிறது. நாம் ஆறு முறை தொல்லைக்குட்படுவோம் என்று ஆண்டவர் நிர்ணயித்திருந்தால் அது ஆறு முறையாகவே இருக்கும். அதற்கு மேல் இருக்காது என்று நிச்சயமாக நம்பலாம்.
நம்மை ஏழு தொல்லைகள் தாக்கியிருப்பதால் நமக்கு ஓய்வு கூட இல்லாமலிருக்கலாம். அப்படியானாலும் நாம் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் ஏழாவதிலும் பொல்லாப்பு நம்மைத் தொடாது. சிங்கம் போன்ற தீங்கு நம்மை அச்சுறுத்த பேரொலி எழுப்பலாம். ஆனால் அது நம்மைத் தாக்கமுடியாது. நம்மைத் தெடக்கூட முடியாது. அது வெகு அருகில் இருப்பதை நாம் உணரலாம். ஆனால் அதன் சிறுவிரல் கூட நம்மைத் தொட முடியாது. நம் அரைகளில் கச்சை கட்டிக்கொண்டு நம்மைத் தாக்க வரும் தொல்லைகளை தைரியமாக எதிர்ப்போமாக! பரமதகப்பனும், இரட்சகரும், பரிசுத்தமாக்குகிறவரும் அற்றவர்கள்தான் அச்சம் கொள்வர். நமக்குப் பயம் இல்லை.
Charles H. Spurgeon