“For I will pour water on the thirsty land, and streams on the dry ground; I will pour out my Spirit on your offspring, and my blessing on your descendants.” Isaiah 44:3.
Our dear children have not the Spirit of God by nature, as we plainly see. We see much in them which makes us fear as to their future, and this drives us to agonizing prayer. When a son becomes specially perverse, we cry with Abraham, “Oh, that Ishmael might live before thee!” We would sooner see our daughters Hannahs than empresses. This verse should greatly encourage us. It follows upon the words, “Fear not, O Jacob, my servant,” and it may well banish our fears.
The Lord will give His Spirit; will give it plentifully, pouring it out; will give it effectually, so that it shall be a real and eternal blessing. Under this divine outpouring our children shall come forward, and “one shall say, I am the Lord’s; and another shall call himself by the name of Jacob.”
This is one of those promises concerning which the Lord will be inquired of. Should we not, at set times, in a distinct manner, pray for our offspring? We cannot give them new hearts, but the Holy Spirit can; and He is easily to be entreated of. The great Father takes pleasure in the prayers of fathers and mothers. Have we any dear ones outside of the ark? Let us not rest till they are shut in with us by the Lord’s own hand.
நம் பிள்ளைகள் எங்கே இருக்கிறார்கள்?
உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன். ஏசா.44:3.
இயற்கை மரபின்படி நம் பிள்ளைகளில் கடவுளின் ஆவி இல்லை என்பதை நாம் தெளிவாய்க் காண்கிறோம். அவர்கள் எதிர்காலத்தைக் குறித்து நாம் அச்சம் கொள்ளத்தக்கதாகப் பல பண்புகள் அவர்களில் இருப்பதைக் காண்கிறோம். இதனால் நாம் வேதனையோடு வேண்டுதல் செய்கிறோம். நம் மகன் வேண்டுமென்றே தவறு செய்யும் போது ஆபிரகாமைப் போல இஸ்மவேல் உமக்கு முன்பாகப் பிழைப்பானாக என்று அங்கலாய்த்து ஜெபிக்கிறோம். நம் குமாரத்திகள் அரசிகளாய் இருப்பதைவிட அன்னாள்களாய் இருப்பதை விரும்புகிறோம். ஆகையால் மேலே கொடுக்கப்பட்ட வசனம் நமக்கு ஊக்கம் ஊட்டுவதாய் இருக்கின்றது. இதன் முற்பகுதியில் என் தாசனாகிய யாக்கோபே,….. பயப்படாதே என்று இருக்கிறது. இது நம் அச்சங்களை அகற்றக் கூடியது.
ஆண்டவர் தம் ஆவியை அருளுவார். நிறைவாக ஊற்றுவார். அது உண்மையாகவே நித்திய ஆசீர்வாதமாய் இருக்கும்படி உறுதியான பயனுள்ளதாய் அருளுவார். இவ்விதமாகத் தெய்வீக ஆவி ஊற்றப்படுவதால் நம் பிள்ளைகளில் ஒருவன், நான் கர்த்தருடையவன் என்பான். ஒருவன் யாக்கோபின் பெயரைத் தரித்துக் கொள்வான்.
இது ஆண்டவரிடம் விவரம் கேட்கவேண்டிய வாக்குறுதிகளில் ஒன்றாகும். ஆகையால் குறித்த நேரங்களில் தெளிவான விதமாக நம் பிள்ளைகளுக்காக நாம் வேண்டுதல் செய்ய வேண்டுமல்லவா? நாம் அவர்களுக்குப் புதிதான இருதயங்களை அளிக்க முடியாது. ஆனால் பரிசுத்த ஆவி அவர்களுக்கு அளிக்கக் கூடும். அவற்றைக் கொடுக்கச் சொல்லி நாம் ஆண்டவரைக் கெஞ்சிக் கேட்க முடியும். முதன்மையான தந்தையான அவர் நாம் நம் பிள்ளைகளுக்காகச் செய்யும் வேண்டுதலைக் கேட்டு மகிழ்ச்சி அடைகிறார். நமக்கு அன்பானவர்கள் யாராவது பேழைக்கு வெளியில் இருக்கிறார்களா? ஆண்டவரின் கரத்தினால் அவர்கள் நம்மோடு பேழைக்குள் இழுக்கப்படும்வரை நாம் களைப்படையாமல் வேண்டிக்கொண்டே இருப்போமாக!
Charles H. Spurgeon