“He upholds the cause of the oppressed and gives food to the hungry. The Lord sets prisoners free,” Psalm 146:7.
He has done it. Remember Joseph, Israel in Egypt, Manasseh, Jeremiah, Peter, and many others. He can do it still. He breaks the bars of brass with a word and snaps the fetters of iron with a look. He is doing it. In a thousand places troubled ones are coming forth to light and enlargement. Jesus still proclaims the opening of the prison to them that are bound. At this moment doors are flying back and fetters are dropping to the ground.
He will delight to set you free, dear friend, if at this time you are mourning because of sorrow, doubt, and fear. It will be joy to Jesus to give you liberty. It will give Him as great a pleasure to loose you as it will be a pleasure to you to be loosed. No, you have not to snap the iron hand: the Lord Himself will do it. Only trust Him, and He will be your Emancipator. Believe in Him in spite of the stone walls or the manacles of iron. Satan cannot hold you, sin cannot enchain you, even despair cannot bind you if you will now believe in the Lord Jesus, in the freeness of His grace, and the fullness of His power to save.
Defy the enemy, and let the word now before you be your song of deliverance; “Jehovah looseth the prisoners.”
கட்டுகளிலிருந்து விடுதலை
கட்டுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாக்குகின்றார் சங்.146:7.
கடந்த நாட்களில் அவர் அவ்விதம் செய்திருக்கிறார். யோசேப்பு, இஸ்ரவேலர், மனாசே, எரேமியா, பேதுரு இவர்களையும் இன்னும் பலரையும் நினைத்துப் பாருங்கள். அவர் இப்போதும் இவ்விதம் செய்யக் கூடியவர். அவர் ஒரு வார்த்தையினால் பித்தளையினாலான கம்பிகளை முறிக்கிறார். ஒரு பார்வையினால் இரும்பு விலங்குகளை உடைத்து விடுகிறார். இன்றும் அவ்விதமே செய்து வருகிறார். ஆயிரக்கணக்காண இடங்களில் மனக்கலக்கம் உள்ளவர்கள் ஒளியினிடத்திற்கும், விடுதலைக்கும் வருகிறார்கள். இப்போதும் இயேசு கட்டுண்டவர்களுக்கு விடுதலையையே அறிவிக்கின்றார். இந்த விநாடியிலும் பூட்டப்பட்டிருந்த கதவுகள் திறக்கப்படுகின்றன. கால் விலங்குகள் அறுந்து விடுகின்றன.
அன்பான நண்பனே நீ இப்போது துக்கத்தினாலும், தயக்கத்தினாலும், அச்சத்தினாலும் துயருற்றிருந்தால் உனக்கு விடுதலை அளிப்பதில் அவர் ஆனந்தம் அடைவார். உனக்கு விடுதலை அளிப்பது இயேசுவுக்கு மகிழ்ச்சி அளிக்கும். விடுவிக்கப்படுவதினால் நீ எவ்வளவு மகிழ்ச்சி அடைவாயோ அவ்வளவு மகிழ்ச்சியை அவரும் அடைவார். இரும்புத் தளையை நீ முறிக்க வேண்டியதில்லை. கற்சுவர்களினாலும் இரும்பு விலங்குகளினாலும் நீ விடுதலையற்றவனாய் இருந்தால் அவர் விடுதலை அளிப்பார். அவரை நம்பு அதுவே போதும். அவர் உன்னை விடுவிப்பார். நீ இப்போதே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிலும், வரம்புகளும் கட்டுப்பாடுகளுமற்ற அவர் கிருபையிலும் இரட்சிப்பதற்கு அவருக்குள்ள முழு ஆற்றலிலும் நம்பிக்கை வைத்தால் சாத்தான் உனக்கு விலங்கிட முடியாது. பாவம் உன்னைக் கட்டுப்படுத்த முடியாது. மனமுறிவு கூட உன்னை இறுகப் பற்ற முடியாது.
எதிரியை எதிர்த்து நில்லுங்கள். யேகோவா கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறார் என்பதே உங்கள் கீதமாயிருக்கட்டும்.
Charles H. Spurgeon