“Also, seek the peace and prosperity of the city to which I have carried you into exile. Pray to the Lord for it, because if it prospers, you too will prosper.” Jeremiah 29:7.
The principle involved in this text would suggest to all of us who are the Lord’s strangers and foreigners that we should be desirous to promote the peace and prosperity of the people among whom we dwell. Specially should our nation and our city be blest by our constant intercession. An earnest prayer for your country and other countries is well becoming in the mouth of every believer. Eagerly let us pray for the great boon of peace, both at home and abroad. If strife should cause bloodshed in out streets, or if foreign battle should slay our brave soldiers, we should all bewail the calamity; let us therefore pray for peace and diligently promote those principles by which the classes at home and the races abroad may be bound together in bonds of amity.
சமாதானத்துக்காக விண்ணப்பம்
நான் உங்களைச் சிறைப்பட்டுப் போகப்பண்ணின பட்டணத்தின் சமாதானத்தைத் தேடி, அதற்காகக் கர்த்தரை விண்ணப்பம்பண்ணுங்கள். அதற்குச் சமாதானமிருக்கையில் உங்களுக்கும் சமாதானமிருக்கும் (எரேமி.9:7).
இந்த வசனத்தில் அடங்கியுள்ள தத்துவம் அண்டவரை அறியாதவர்களும் அவர் அரசுக்கு அப்பாற்பட்டவர்களுமானவர்களுக்கும் குறிப்பாச் சொல்வது என்னவெனில், நாம் குடியிருக்கும் சமூகத்தினர் இடையே சமாதானமும் வளமையும் வளர்வதற்கு நாம் ஆவல் உள்ளவர்களாய் இருக்கவேண்டும் என்பதே. சிறப்பாக நம் நாட்டினரும் நகரத்தினரும் ஆசீர்வதிக்கப்பட நாம் இடைவிடாது ஆண்டவரிடம் மன்றாடவேண்டும். அவரவர் நாட்டிற்காகவும் மற்ற நாடுகளுக்காகவும் அக்கறையாக வேண்டிக்கொள்வது ஒவ்வொரு விசுவாசிக்கும் ஏற்றது.
நம் நாட்டிலும் வெளிநாடுகளிலும் அவரின் வரமாகிய சமாதானம் நிலைத்திருக்கவேண்டுமென்று ஆர்வத்துடன் வேண்டிக்கொள்வோமாக. சச்சரவினால் நம் தெருக்களில் இரத்தம் சிந்தப்பட்டாலும், வெளிநாடுகளில் நடைபெறும் யுத்தத்தில் வீரம் மிக்க நம் போர்வீரர் கொல்லப்பட்டாலும் நாம் யாவரும் அப்போரைக் குறித்துப் புலம்பவேண்டியது அவசியம். ஆகவே நாம் சமாதானத்துக்காக வேண்டிக்கொண்டு, நம் நாட்டிலுள்ள பல பிரிவினரும் வெளிநாடுகளிலுள்ள பல இனத்தினரும் நட்புறவின் தளைகளால் பிணைக்கப்படுவதற்கான தத்துவங்கள் வளர ஊக்கமுடன் உழைப்போமாக.
நம் நாட்டினர் சமாதானமாயிருக்கையில் நமக்கும் சமாதானம் வாக்களிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் விரும்பத்தக்கது. ஏனெனில் நாம் நம் குடும்பத்தினரைக் கடவுளுக்குப் பயன்படுகிறவர்களாக வளர்க்கலாம். நற்செய்தியையும் எந்தத் தடையும் இடையூறும் இல்லாமல் போதிக்கலாம். இன்றைய தினத்திலே நம் நாட்டினரின் பாவங்களை அறிக்கையிட்டு, ஆண்டவரின் மன்னிப்பையும் ஆசீர்வாதத்தையும் இயேசுவின்மூலமாய் கேட்டு வேண்டிக்கொள்வோமாக.
Charles H. Spurgeon