“In him our hearts rejoice, for we trust in his holy name.” Psalm 33:21.

The root of faith produces the flower of heart-joy. We may not at the first rejoice, but it comes in due time. We trust the Lord when we are sad, and in due season He so answers our confidence that our faith turns to fruition, and we rejoice in the Lord. Doubt breeds distress, but trust means joy in the long run.

The assurance expressed by the psalmist in this verse is really a promise held out in the hands of holy confidence. Oh, for grace to appropriate it. If we do not rejoice at this moment, yet we shall do so, as surely as David’s God is our God.

Let us meditate upon the Lord’s holy name that we may trust Him the better and rejoice the more readily. He is in character holy, just, true, gracious, faithful, and unchanging. Is not such a God to be trusted? He is all wise, almighty, and everywhere present; can we not cheerfully rely upon Him? Yes, we will do so at once and do so without reserve. Jehovah-Jireh will provide; Jehovah-Shalom will send peace; Jehovah-Tsidkenu will justify; Jehovah-Shammah will be forever near; and in Jehovah-Nissi we will conquer every foe. They that know Thy name will trust Thee; and they that trust Thee will rejoice in Thee, O Lord.

நம்பிக்கை மகிழ்ச்சியைக் குறிக்கிறது

அவருடைய பரிசுத்த நாமத்தை நம்பியிருக்கிறபடியால் நம்முடைய இருதயம் அவருக்குள் களிகூறும். சங்.33:21.

நம்பிக்கை என்னும் வேர் மனமகிழ்ச்சி என்னும் பூவை பூக்கும். நாம் முதலில் மகிழ்ச்சி அடையாவிட்டாலும் ஏற்ற காலத்தில் அடைவோம். நாம் துக்கத்தில் இருக்கும்போது கடவுள்மேல் நம்பிக்கை வைக்கிறோம். ஏற்ற காலத்தில் அவர் நம் நம்பிக்கைக்குத் தகுந்த பலனை அளிப்பதால் நம் நம்பிக்கை நிறைவேறி, நாம் நம் ஆண்டவரில் மகிழ்ச்சி அடைகிறோம். சந்தேகம் வேதனையை உண்டாக்குகிறது. ஆனால் தக்க வேளையில் நம்பிக்கையினால் மகிழ்ச்சி ஏற்படுகிறது.

இந்த வசனத்தில் சங்கீதக்காரனால் வெளியிடப்படும் நம்பிக்கை தூய பற்றுறுதியினால் அருளப்படும் வாக்குறுதியாகும். அதை நம்முடையதாக்கிக்கொள்ளத் தேவையான கிருபைக்காக வேண்டிக்கொள்வோமாக. தாவீதின் கடவுள் எவ்வளவு நிச்சயமாய் நம் கடவுளாய் இருக்கிறாரோ அதைப்போல நாம் இப்போதும் மகிழ்ச்சியாயிராவிட்டாலும் திட்டமாக இனி இருப்போம்.

நாம் இன்னும் அதிகமாக அவர்மேல் நம்பிக்கை வைக்கவும் உடனபடியாகத் தடையின்றி மகிழ்ச்சியடையவும் தக்கதாக ஆண்டவரின் தூய நாமத்தை ஆழ்ந்து ஆராய்வோமாக. அவர் தூய்மையுள்ளவர், நீதியுள்ளவர், உண்மையுள்ளவர், கிருபையுள்ளவர், நேர்மையானவர், மாறாதவர், இப்படிப்பட்ட கடவுள் நம்பத் தகுந்தவர் அல்லவா? அவர் ஞானம் மிக்கவர். வலிமை மிக்கவர், எல்லா இடத்திலும் நிறைந்திருப்பவர். நாம் மகிழ்சியுடன் அவர்மேல் சார்ந்திருக்க முடியாதா? ஆம், முடியும். இப்போதே எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் செயல்படுவோமாக. யேகோவாயீரே: தேவையானது அருளப்படும். யேகோவாஷாலோம்: சமாதானம் அனுப்பப்படும். யேகோவாஷம்மா: எப்போதும் அருகிலிருப்பார். யோகோவாநிசி: பகைவர்மேல் வெற்றிபெறுவோம். உம் நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்புவார்கள். ஆண்டவரே, உம்மை நம்புகிறவர்கள் உம்மில் மகிழ்ச்சியடைவார்கள்.

Charles H. Spurgeon