“For whoever has, to him more will be given, and he will have abundance; but whoever does not have, even what he has will be taken away from him.” Matthew 13:12.
When the Lord has given to a man much grace, He will give him more. A little faith is a nest egg; more faith will come to it. But then it must not be seeming faith, but real and true. What a necessity is laid upon us to make sure work in religion and not to profess much, and possess nothing! For one of these days the very profession will be taken from us, if that be all we have. The threatening is as true as the promise.
Blessed be the Lord, it is His way when He has once made a beginning to go on bestowing the graces of His Spirit, till He who had but little, and yet truly had that little, is made to have abundance. Oh, for that abundance! Abundance of grace is a thing to be coveted, It would be well to know much but better to love much. It would be delightful to have abundance of skill to serve God but better still to have abundance of faith to trust in the Lord for skill and everything.
Lord, since Thou hast given me a sense of sin, deepen my hatred of evil. Since Thou hast caused me to trust Jesus, raise my faith to full assurance. Since Thou hast made me to love Thee, cause me to be carried away with vehement affection for Thee!
விசுவாசிப்பவனாயும் உள்ளவனாயும் இரு
உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும். பரிபூரணமும் அடைவான். மத்.13:12.
ஆண்டவர் ஒருவருக்கு மிகுந்த கிருபை அளித்திருந்தால் அவருக்கு இன்னும் அதிகம் கொடுப்பார். சிறிதளவு நம்பிக்கை நல்ல ஆரம்பமாகும். நாளடைவில் அது அதிகரித்துக்கொண்டே போகும். அது மாய்மாலமான விசுவாசமாய் இருக்கக்கூடாது. ஆனால் உண்மையான விசுவாசமாய் இருக்கவேண்டும். நம் நம்பிக்கையைக் குறித்து நாம் உண்மையாய் உழைப்பது எவ்வளவு முக்கியம் என்று பாருங்கள். நாம் ஒன்றும் உள்ளவர்களாய் இராமல் வெளியிடுகிறவர்களாய் மட்டும் இருக்கக்கூடாது. ஏனெனில் நாம் அப்படிப்பட்டவர்களாய் இருந்தால் நாம் ஊழியம் செய்வதிலிருந்தே நீக்கப்பட்டுவிடுவோம். வாக்குறுதியைப்போலவே எச்சரிக்கையும் உண்மையானதாகும்.
ஆண்டவர் மகிமைப்படுவாராக. கிருபையில் யாராவது குறைவுள்ளவர்களாய் இருந்தால், அவர்கள் பரிபூரணம் அடையும்வரை அவர் கிருபையைக் கொடுத்துக்கொண்டேயிருப்பார். அவ்விதம் கிருபையில் பரிபூரணம் அடைய நாம் விருப்பம் உள்ளவர்களாய் இருப்பது நல்லது. ஆனால் அதிகம் நேசிப்பவர்களாய் இருப்பது அதைவிட மேலானது. நாம் ஆண்டவருக்கென்று உழைப்பதற்குத் திறமை உள்ளவர்களாய் இருப்பது மற்ற எல்லா நன்மைகளுக்கும் கடவுளை நம்பத்தகுந்த விசுவாசம் உள்ளவர்களாய் இருப்பது அதைவிடச் சிறந்ததாகும்.
ஆண்டவரே, பாவத்தைக் குறித்த உணர்ச்சி எனக்கு அளித்திருப்பதால் நான் தீமையை முழுவதுமாக வெறுக்க எனக்கு உதவிசெய்யும். நான் இயேசுவை நம்பச் செய்திருப்பதால் நான் உறுதியான விசுவாசம் உள்ளவனாய் இருக்கச்செய்யும். உம்மில் நான் அன்புகூரச் செய்திருப்பதால் உம்மேல் தீவிரமான பாசம் உள்ளவனாக்கும்.
Charles H. Spurgeon