“Now I will rise,” says the Lord; “Now I will be exalted, Now I will lift Myself up.” Isaiah 33:10.
When the spoilers had made the land as waste as if devoured by locusts, and the warriors who had defended the country sat down and wept like women, then the Lord came to the rescue. When travelers ceased from the roads to Zion, and Bashan and Carmel were as vineyards from which the fruit has failed, then the Lord arose. God is exalted in the midst of an afflicted people, for they seek His face and trust Him. He is still more exalted when in answer to their cries He lifts up Himself to deliver them and overthrow their enemies.
Is it a day of sorrow with us? Let us expect to see the Lord glorified in our deliverance. Are we drawn out in fervent prayer? Do we cry day and night unto Him? Then the set time for His grace is near. God will lift up Himself at the right season. He will arise when it will be most for the display of His glory. We wish for His glory more than we long for our own deliverance. Let the Lord be exalted, and our chief desire is obtained.
Lord, help us in such a way that we may see that Thou Thyself art working. May we magnify Thee in our inmost souls. Make all around us to see how good and great a God Thou art.
கடவுளே செய்வார்
இப்பொழுது எழுந்தருளுவேன் இப்பொழுது உயருவேன் இப்பொழுது மேன்மைப்படுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். ஏசா.33:10.
வெட்டுக்கிளிகள் நாட்டைப் பாழ்படுத்தி நாட்டைப் பாதுகாக்கப் போரிட்டவர்கள் உட்கார்ந்து பெண்களைப்போல் அழுதபோது ஆண்டவர் உதவிக்கு வந்தார். சீயோனுக்குச் செல்லும் வழியில் பயணிகள் நடமாட்டம் இல்லாதபோதும் பாசானும் கர்மேலும் கனி கொடாத திராட்சைத் தோட்டங்களைப்போல் ஆனபோதும் ஆண்டவர் எழும்பி வந்தார். வருத்தப்படும் மக்களிடையே ஆண்டவர் மகிமைப் படுகிறார். ஏனெனில் அவர்கள் அவர் முகத்தைத்தேடி அவரை நம்புகிறார்கள். அவர்கள் வேண்டுதலைக் கேட்டு அவர்கள் பகைவரை முறியடித்து அவர்களுக்கு விடுதலை அளிக்க முன்வரும் போது அவர் இன்னும் அதிகமாக மகிமைப் படுகிறார்.
இன்று நமக்குத் துக்கநாளாயிருக்கிறதா? நம் விடுதலையில் ஆண்டவர் மகிமைப்படுவதைக்காண எதிர்பார்ப்போமாக. நாம் ஊக்கமாக ஜெபிப்பதில் முனைந்திருக்கிறோமா? அவரை நோக்கி இரவும் பகலும் வேண்டிக்கொள்கிறோமா? அப்படியானால் அவர் கிருபையை அடையும் நேரம் வந்துவிட்டது. தகுந்த சமயத்தில் கடவுள் உதவிக்கு வர தம்மை உயர்த்துவார். அவர் மகிமையை நிறைவாகக் காட்டக் கூடிய சமயத்தில் அவர் வருவார். நம் விடுதலைக்காக ஏங்குவதைவிட அவர் மகிமைப்படும்படியாக ஏங்குகிறோம். ஆண்டவர் உயர்த்தப்படட்டும். அப்பொழுது நம் சிறப்பான ஆசை நிறைவேறிவிட்டது போல் ஆகும்.
ஆண்டவரே நீர் நீரே கிரியை செய்து வருகிறீர் என்பதை நாங்கள் காணத்தக்கதாக எங்களுக்குத் துணைபுரியும். எங்கள் உள்ளான ஆன்மாவில் உம்மை மகிமைப்படுத்துகிறவர்களாய் இருப்போமாக. நீர் எவ்வளவு நல்லவரும் பெரியவரும் ஆனவர் என்பதை எங்களைச் சுற்றியுள்ளவர்கள் காணச்செய்யும்.
Charles H. Spurgeon