Therefore this is what the Lord says concerning the king of Assyria: “He will not enter this city or shoot an arrow here. He will not come before it with shield or build a siege ramp against it. By the way that he came he will return; he will not enter this city, declares the Lord. I will defend this city and save it, for my sake and for the sake of David my servant.” 2 Kings 19:32.

Neither did Sennacherib molest the city. He had boasted loudly, but he could not carry out his threats. The Lord is able to stop the enemies of His people in the very act. When the lion has the lamb between his jaws, the great Shepherd of the sheep can rob him of his prey. Our extremity only provides an opportunity for a grander display of divine power and wisdom.

In the case before us, the terrible foe did not put in an appearance before the city which he thirsted to destroy. No annoying arrow could he shoot over the walls, and no besieging engines could-he put to work to batter down the castles, and no banks could he cast up to shut in the inhabitants. Perhaps in our case also the Lord will prevent our adversaries from doing us the least harm. Certainly He can alter their intentions or render their designs so abortive that they will gladly forego them. Let us trust in the Lord and keep His way, and He will take care of us. Yea, He will fill us with wondering praise as we see the perfection of His deliverance.

Let us not fear the enemy till he actually comes, and then let us trust in the Lord.

பகைவரின் திட்டங்கள் அழிக்கப்பட்டன

ஆகையால் கர்த்தர் ஆசீரியா ராஜாவைக் குறித்து அவன் இந்த நகரத்திற்குள் பிரவேசிப்பதில்லை. இதின்மேல் அம்பு எய்வதுமில்லை. இதற்கு முன் கேடகத்தோடு வருவதுமில்லை. இதற்கு எதிராகக் கொத்தளம் போடுவதுமில்லை. 2.இரா.19:32.

சனகெரிப் நகருக்கு எவ்விதத் தொல்லையும் அளிக்கவில்லை. அவன் செருக்குடன் பேசியிருந்தான். ஆனால் அவன் அச்சுறுத்தினபடி செயல்படமுடியவில்லை. தம் மக்களின் எதிரிகள் செயல்படுவதைக்கூட ஆண்டவர் தடுக்கக் கூடியவராயிருக்கிறார். சிங்கம் தன்வாயிலே ஆட்டுக்குட்டியை கௌவியிருந்தாலும் சிறந்த மேய்ப்பரானவர் அந்த ஆட்டைச் சிங்கத்தின் வாயிலிருந்து பிடுங்கிக் காப்பாற்றக்கூடியவர். நமக்கு ஏற்படும் மனக்கலக்கம் தெய்வீக ஆற்றலையும் ஞானத்தையும் வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்பையே அளிக்கிறது.

மேலே கூறப்பட்டுள்ள நிகழ்ச்சியில் அந்தப் பயங்கரமான எதிரி தான் அழிக்க விரும்பிய நகரின் முன்கூடவரவில்லை. அதன் மதிற் சுவருக்கு மேலாக அம்பு எய்து துன்புறுத்தவுமில்லை. நகரிலிருந்து மாளிகைகளைத் தகர்த்தெறிய எந்த இயந்திரங்களையும் உபயோகிக்கவுமில்லை. நகரை முற்றுகையிடக் கொத்தளம் போடவுமில்லை. நம் பகைவர்களும் நமக்கு எவ்விதத் தீங்கும் செய்யாதபடி கர்த்தர் காப்பாற்றுவார். அவர்கள் திட்டங்களை மாற்றி உள்ளத்தின் எண்ணங்களைக் கலைத்து விடுவதால் அவை நிறைவேறாமற் போவதைக் குறித்து அவர்கள் கவலைப்படுவதில்லை. நம் ஆண்டவரில் நம்பிக்கை வைத்து அவர் வழியில் நடந்தால் அவர் நம்மைக் காத்துப் பேணுவார். அவர் சிறப்பான முறையில் நமக்கு அளிக்கும் விடுதலையைக் குறித்து நாம் வியப்படைந்து அவரைப் போற்றித் துதிப்போம். எதிரி நம்மை எதிர்த்து வரும்வரை அவனுக்குப் பயப்படாமல் இருப்போமாக. அவன் வந்தால் ஆண்டவர் மேல் நம்பிக்கை வைப்போமாக.

Charles H. Spurgeon.