“Surely the wrath of man shall praise you; the remnant of wrath you will put on like a belt.” Psalm 76:10.

Wicked men will be wrathful. Their anger we must endure as the badge of our calling, the token of our separation from them: if we were of the world, the world would love its own. Our comfort is that the wrath of man shall be made to redound to the glory of God. When in their wrath the wicked crucified the Son of God they were unwittingly fulfilling the divine purpose, and in a thousand cases the willfulness of the ungodly is doing the same. They think themselves free, but like convicts in chains they are unconsciously working out the decrees of the Almighty.

The devices of the wicked are overruled for their defeat. They act in a suicidal way and baffle their own plottings. Nothing will come of their wrath which can do us real harm. When they burned the martyrs, the smoke which blew from the stake sickened men of popery more than anything else.

Meanwhile, the Lord has a muzzle and a chain for bears. He restrains the more furious wrath of the enemy. He is like a miller who holds back the mass of the water in the stream, and what He does allow to flow He uses for the turning of His wheel. Let us not sigh, but sing. All is well, however hard the wind blows.

கடவுளை மகிமைப்படுத்தும் கோபம்

மனுஷனுடைய கோபம் உமது மகிமையை விளங்கப் பண்ணும். மிஞ்சும் கோபத்தை நீர் அடக்குவீர். சங்.76:10.

அநீதியான மக்கள் சீற்றங் கொள்கிறார்கள். அவர்கள் கோபத்தை நம் அழைப்பின் சின்னமாகவும் அவர்களிலிருந்து நாம் தனிப்பட்டவர்கள் என்பதின் அடையாளமாகவும் பொறுத்துக்கொள்ள வேண்டும். நாம் உலகத்தாராயிருந்தால் உலகம் தன்னுடையவர்களை நேசிக்கும். மனிதனுடைய கோபம் கடவுளின் மகிமை பெருக உதவத் தக்கதாக மாற்றப்படும் என்பதே நமக்கு ஆறுதல் அளிப்பதாகும். பழிபாவத்துக்கு அஞ்சாத மக்கள் தங்கள் கோபத்தினால் தேவனுடைய குமாரனைச் சிலுவையில் அறைந்த போது, அறியாமலே கடவுளின் திட்டத்தை நிறைவேற்றினார்கள். அதேவிதமாகக் கடவுள் பயம் இல்லாதவர்களும் பலவிதங்களில் செய்கிறார்கள். அவர்கள் சுதந்திரமானவர்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால் சங்கிலிகளால் கட்டப்பட்ட குற்றவாளிவளைப்போல் தங்களை அறியாமலே சர்வ வல்லவரின் கட்டளைகளை நிறைவேற்றுகிறார்கள்.

துன்மார்க்கரின் திட்டங்கள் உதறித்தள்ளப்படுவதால் அவை தோல்வியடைகின்றன. அவர்கள் அறியாமலே தங்களுக்குத் தீமை இழைக்கும் விதமாகத் திட்டங்கள் தீட்டி அவற்றினால் குழப்பம் அடைகிறார்கள். அவர்களின் சீற்றத்தினால் நமக்கு எந்தவிதமான தீமையும் நேரிடாது. இரத்தசாட்சிகளைத் தீக்கிரையாக்கின போது அத்தீயிலிருந்து கிளம்பின புகை தீயிட்டவர்களுக்கே தீமை விளைவித்தது.

கரடி போன்றவர்களை அடக்கக் கூடிய சங்கிலியும் முகவாய்க் கட்டும் ஆண்டவரின் கையில் இருக்கின்றன. பகைவரின் மிஞ்சும் கோபத்தை அவர் அடக்குவார். அவர் ஓர் ஆலையின் உரிமையாளரைப் போல் இருக்கிறார். தேவைக்கு அதிகமான நீரை வாய்க்கால் வழியே செல்லாமல் தடுத்து விடுகிறார். அவ்விதமாகத் தடுத்த நீரை ஆலையின் காற்றாடியைச் சுற்றப் பயன்படுத்துகிறார். நாம் பெருமூச்சு விடவேண்டியதில்லை. பாட்டுகள் பாடலாம். எவ்வளவு வேகமாகக் காற்று வீசினாலும் எல்லாம் நல்ல விதமாக முடியும்.

Charles H. Spurgeon.