“For it is written, I will destroy the wisdom of the wise, and will bring to nothing the understanding of the prudent.” 1 Corinthians 1:19.
This verse is a threatening so far as the worldly wise are concerned, but to the simple believer it is a promise. The professedly learned are forever trying to bring to nothing the faith of the humble believer, but they fail in their attempts. Their arguments break down, their theories fall under their own weight, their deep-laid plots discover themselves before their purpose is accomplished. The old gospel is not extinct yet, nor will it be while the Lord liveth. If it could have been exterminated, it would have perished from off the earth long ago.
We cannot destroy the wisdom of the wise, nor need we attempt it, for the work is in far better hands. The Lord Himself says, “I will,” and He never resolves in vain. Twice does He in this verse declare His purpose, and we may rest assured that He will not turn aside from it.
What clean work the Lord makes of philosophy and “modern thought” when He puts His hand to it! He brings the fine appearance down to nothing; He utterly destroys the wood, hay, and stubble. It is written that so it shall be, and so shall it be. Lord, make short work of it. Amen, and amen.
கடவுள் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவர்
ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேன் என்று எழுதியிருக்கிறது. 1.கொரி.1:19.
இந்த வசனம் உலகப்பிரகாரமான ஞானிகளைப் பொறுத்தவரையில் அச்சம் உறுத்துகிறதாய் இருக்கிறது. ஆனால் சாதாரண விசுவாசியைப்பொறுத்த வரையில் இது ஒரு வாக்குறுதியாகும். ஞானிகள் என்று வெளிப்படையாக ஒப்புக்கொள்ளப்பட்டவர்கள், சாதாரண விசுவாசிகளின் நம்பிக்கை, ஒன்றுக்கும் உதவாதென்று ஆக்கவே எப்போதும் முயன்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் முயற்சிகளில் அவர்கள் தோற்றே விடுகிறார்கள். அவர்கள் விவாதங்கள் வியர்த்தமாகி விடுகின்றன. அவர்கள் கோட்பாடுகள் அர்த்தமற்றவையாகி விடுகின்றன. அவர்களுடைய ஆழமான திட்டங்கள் நிறைவேறுமுன்பே வெளியரங்கமாகி விடுகின்றன. பழமையான நற்செய்தி இன்று வரை அழிந்து விடவில்லை. ஆண்டவர் உயிரோடு இருக்கும் வரை அது அழியவே அழியாது. அதை வேரோடு ஒழிக்க முடிந்திருக்குமேயானால் வெகு நாட்களுக்கு முன்னரே அழிக்கப்பட்டிருக்கும். ஞானிகளுடைய ஞானத்தை நாம் அழிக்கவே முடியாது.
அவ்விதம் செய்ய நாம் முயலவும் வேண்டியதில்லை. ஏனெனில் ஆண்டவர் நான் அழிப்பேன் என்கிறார். அவர் செய்து முடிக்காததைக் குறித்து திட்டமிடுவதில்லை. மேலே கொடுக்கப்பட்டுள்ள வசனத்தில் அவர் இரண்டு முறை தம் திட்டத்தை வெளிப்படுத்துகிறார். அதை நிறைவேற்றியே தீருவார் என்று நாம் நிச்சயமாக நம்பலாம். தர்க்க சாஸ்திரத்தையும் நவீன கருத்துக்களையும் அவர் அடியோடு அழித்து விடுவார். அவ்விதம் செய்வார் என்று எழுதப்பட்டிருக்கிறது. அது கண்டிப்பாகச் செய்து முடிக்கப்படும். ஆண்டவரே அதை விரைவில் நிறைவேற்றும் ஆமென், ஆமென்.
Charles H. Spurgeon.