“I will bring the blind by a way that they knew not.” Isaiah 42:16.
Think of the infinitely glorious Jehovah acting as a Guide to the blind! What boundless condescension does this imply! A blind man cannot find a way which he does not know. Even when he knows the road, it is hard for him to traverse it; but a road which he has not known is quite out of the question for his unguided feet. Now, we are by nature blind as to the way of salvation, and yet the Lord leads us into it and brings us to Himself, and then opens our eyes. As to the future, we are all of us blind and cannot see an hour before us; but the Lord Jesus will lead us even to our journey’s end. Blessed be His name!
We cannot guess in which way deliverance can possibly come to us, but the Lord knows, and He will lead us till we shall have escaped every danger. Happy are those who place their hand in that of the great Guide and leave their way and themselves entirely with Him. He will bring them all the way; and when He has brought them home to glory and has opened their eyes to see the way by which He has led them, what a song of gratitude will they sing unto their great Benefactor! Lord, lead Thy poor blind child this day, for I know not my way!
நம்பக்கூடிய வழிகாட்டி
குருடரை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி ஏசா.42:16.
மகிமை வாய்ந்த பரம்பொருளான யேகோவா குருடரின் வழிகாட்டியாவதை நினைத்துப் பாருங்கள்! இது எவ்வளவு எல்லையற்ற அருள்பாலிக்கும் பண்பைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது என்று பாருங்கள். ஒரு குருடன் தான் அறியாத வழியைக் கண்டுபிடிக்க முடியாது. வழியை நன்றாக அறிந்திருந்தாலும்கூட அதில் நடந்து செல்வது அவனுக்குக் கடினமாகும். வழிகாட்ட யாரும் இல்லாவிட்டால் அறியாத வழியிலே நடந்துசெல்ல அவனுக்கு முடியவே முடியாது. இயற்கையாக நாம் இரட்சிப்பின் வழியை அறியாத குருடராயிருக்கிறோம். ஆகிலும் ஆண்டவர் நம்மை அதற்கு வழி நடத்தி, தம்மண்டைகொண்டு சேர்த்து, நம் கண்களைத் திறக்கிறார். எதிர்காலத்தைக் குறித்து நாம் யாவரும் குருடராயிருக்கிறோம். ஒருமணி நேரத்திற்குள் என்ன நடக்கும் என்று பார்கமுடியாதவர்களாய் இருக்கிறோம். ஆனால் ஆண்டவர் இயேசு நம் பயணத்தின் இறுதிவரை நம்மை வழி நடத்துவார். அவருக்கு மகிமை உண்டாவதாக.
நமக்கு எவ்விதமாக விடுதலை வரும் என்பதை நாம் அறியோம். ஆனால் ஆண்டவர் அறிவார். நாம் எல்லா ஆபத்துகளிலிருந்தும் தப்பும்வரை அவர் நம்மை வழிநடத்துவார். சிறந்த வழிகாட்டியாகிய அவர் கைகளில் தங்கள் கைகளை வைத்து தங்களையும் தங்கள் வழியையும் அவரிடமே ஒப்புவிப்பவர்கள் பாக்கியவான்கள். அவர் முழுதூரமும் அவர்களை வழிநடத்துவார். பின் அவர்களைப் பரலோகத்தின் மகிமைக்குள் அழைத்துச் சென்று, அவர் நடத்திவந்த பாதையைக் காண அவர்கள் கண்களைத் திறக்கும்போது அவர்கள் தங்கள் சிறந்த உபகாரியைப் புகழ்பாடும் பாட்டு எப்படிப்பட்டதாயிருக்கும்! ஆண்டவரே, என் வழியை நான் அறியாதபடியால், கண்தெரியாத ஏழைப் பிள்ளையாகிய என்னை இன்று வழிநடத்தும்.
Charles H. Spurgeon.