“As for you, go your way till the end. You will rest, and then at the end of the days you will rise to receive your allotted inheritance.” Daniel 12:13.

We cannot understand all the prophecies, but yet we regard them with pleasure and not with dismay. There can be nothing in the Father’s decree which should justly alarm His child. Though the abomination of desolation be set up, yet the true believer shall not be defiled; rather shall he be purified, and made white, and tried. Though the earth be burned up, no smell of fire shall come upon the chosen. Amid the crash of matter and the wreck of worlds, the Lord Jehovah will preserve His own.

Calmly resolute in duty, brave in conflict, patient in suffering, let us go our way, keeping to our road, and neither swerving from it nor loitering in it. The end will come; let us go our way till it does.

Rest will be ours, All other things swing to and fro, but our foundation standeth sure. God rests in His love, and, therefore, we rest in it. Our peace is, and ever shall be, like a river. A lot in the heavenly Canaan is ours, and we shall stand in it, come what may. The God of Daniel will give a worthy portion to all who dare to be decided for truth and holiness as Daniel was. No den of lions shall deprive us of our sure inheritance.

நம்மை அச்சுறுத்தக் கூடியது ஒன்றுமில்லை

நீயோவென்றால் முடிவு வருமட்டும் போயிரு. நீ இளைப்பாறிக் கொண்டிருந்து நாட்களின் முடிவிலே உன் சுதந்திர வீதத்துக்கு எழுந்திருப்பாய் என்றான். தானி.12:13.

தீர்க்கரின் எல்லா உரைகளையும் நாம் விளங்கிக் கொள்வதில்லை. ஆயினும் அவை மகிழ்ச்சி அளிப்பவை என்று கருதுகிறோமே அல்லாமல் அவற்றைக் குறித்து கலக்கம் அடைவதில்லை. பிதாவின் ஆணையில் யாதொன்றும் அவர் பிள்ளையைக் கலக்கமடையச் செய்யக்கூடியதாய் இருக்க முடியாது. பாழாக்கும் அருவருப்பு ஸ்தாபிக்கப்பட்டாலும் உண்மையான விசுவாசி கறைப்படுத்தப்படாமல் இருப்பான். சுத்திகரிக்கப்பட்டு வெண்மையாக்கப்பட்டு புடமிடப்பட்டவராயிருப்பான். பூமி எரிந்து போனாலும் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் மேல் அக்கினியின் வாசனை இராது. பூமியும் அதில் உள்ளவைகளும் அளிக்கப்படும்போது யேகோவா தமக்கு உரியவர்களைக் காப்பாற்றி விடுவிப்பார்.

நாம் பாதையை விட்டு விலகுகிறவர்களாயாவது பாதையில் அலைந்து திர்pந்து பொழுது போக்குகிறவர்களாயாவது இராமல் கடமையைச் செய்வதில் கண்ணும் கருத்தும் உள்ளவர்களாய் போராடுவதில் துணிவு மிக்கவர்களாய் துன்பத்தில் பொறுமை உள்ளவர்களாய் இருப்போமாக! முடிவு எப்படியும் வரும். அது வரை நாம் சரியான பாதையில் செல்வோமாக!

நமக்கு இளைப்பாறுதல் எப்படியும் கிடைக்கும். மற்றவையெல்லாம் ஊசலாடுபவையாக இருந்தாலும் நம் அஸ்திவாரம் உறுதியாய் நிலைத்திருக்கிறது. கடவுள் அவர் அன்பில் நிலைத்திருக்கிறார். ஆகையால் நாம் அதில் நிலைத்திருக்கிறோம். நம் சமாதானம் இப்போதும் எப்போதும் ஆறு போலிருக்கும். பரம கானானில் எப்படியும் நமக்கு ஓர் இடம் உண்டு. தானியேலைப் போல் உண்மையாகவும் தூய்மையாகவும் இருக்கத் தைரியம் காட்டுபவர்களுக்குத் தானியேலின் கடவுள் தகுந்த மதிப்பு அளிப்பார். எந்தச் சிங்கக்கூட்டமும் நமக்குக் கிடைக்கவிருக்கும் நன்மைகளைத் தடை செய்ய முடியாது.

Charles H. Spurgeon