“As a mother comforts her child, so will I comfort you; and you will be comforted over Jerusalem.” Isaiah 66:13.
A mother’s comfort! Ah, this is tenderness itself. How she enters into her child’s grief! How she presses him to her bosom and tries to take all his sorrow into her own heart! He can tell her all, and she will sympathize as nobody else can. Of all comforters the child loves best his mother, and even full-grown men have found it so.
Does Jehovah condescend to act the mother’s part? This is goodness indeed. We readily perceive how He is a father; but will He be as a mother also? Does not this invite us to holy familiarity, to unreserved confidence, to sacred rest? When God Himself becomes “the Comforter,” no anguish can long abide. Let us tell out our trouble, even though sobs and sighs should become our readiest utterance. He will not despise us for our tears; our mother did not. He will consider our weakness as she did, and He will put away our faults, only in a surer, safer way than our mother could do. We will not try to bear our grief alone; that would be unkind to one so gentle and so kind. Let us begin the day with our loving God, and wherefore should we not finish it in the same company, since mothers weary not of their children?
தெளிவான ஆறுதல்
ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல நான் உங்களைத் தேற்றுவேன். ஏசா.66:13.
ஒரு தாய் எவ்வளவு கனிவாகத் தேற்றுவாள் என்று நினைத்துப் பாருங்கள். தன் குழந்தையின் துக்கத்தில் அவள் எவ்விதம் பங்கு பெறுகிறாள் என்று கவனியுங்கள். குழந்தையைத் தன் மார்போடு அணைத்து, அதன் துக்கத்தையெல்லாம் தன் இதயத்திற்கு மாற்ற முயற்சி செய்கிறாள். நம் தாயிடம் எல்லாவற்றையும் சொல்லலாம். வேறு எவரும் தேற்றக்கூடாத விதமாய் அவள் தேற்றுவாள். ஆறுதல் அளிப்பவர்கள் எல்லாரிலும் குழந்தை தன் தாயையே அதிகம் நேசிக்கிறாள். இது உண்மையென்று பெரியவர்களும் கண்டு அறிந்திருக்கிறார்கள்.
தாயைப் போலவே யேகோவாவும் அருள் பாலிக்கிறவராயிருக்கிறாரா? இதுவே அவரின் மேம்பாடு ஆகும். அவர் தகப்பனாயிருக்கிறார் என்பதை மனமார உணர்கிறோம். அவர் தாயைப்போலகூட இருப்hபரா? இருப்பார் என்பது நம்மை அவரோடு தோழமை கொள்ளவும், அவரில் தங்குதடையின்றி உறுதியான நம்பிக்கை வைக்கவும், அவரில் மனஅமைதி பெறவும் அழைக்கிறது அல்லவா? கடவுளே தேற்றரவாளன் ஆகும்போது எந்தக் கடுந்துயரமும் அதிக காலம் நிலைத்திருக்காது. அழுகையும் பெரு மூச்சுமே முதலில் வெளிப்பட்டாலும் நம் துயரின் காரணத்தை அவரிடம் எடுத்துச்சொல்வோமாக. நம் கண்ணீரைக் கண்டு அவர் நம்மை இகழமாட்டார். நம் தாய் அவ்விதம் செய்வதில்லையே! அவளைப்போல அவரும் நம் வலுக்குறைவை எண்ணிப் பார்ப்பார். நம் தாயைவிட நிச்சயமானதும் இடையூரற்றதுமான விதத்தில் நம் குற்றங்குறைகளை ஒதுக்கிவைத்துவிடுவார். நாம் தனியாக நம் துக்கத்தைச் சுமக்கவேண்டியதில்லை. அவ்விதம் செய்வது இவ்வளவு தயவும் இரக்கமும் உள்ளவருக்குக் காட்டும் இரக்கமற்ற செயலாகும். ஆகையால் அன்பே உருவான நம் கடவுளோடு ஒவ்வொரு நாளையும் தொடங்கலாம். தாய்மார் தங்கள் பிள்ளைகளைக் குறித்து ஒருபோதும் சலிப்படையாததுபோல் அவரும் இருப்பார். ஆகையால் நம் நாள் முடியும்வரை அவரோடு தைரியமாக இருக்கலாம்.
Charles H. Spurgeon