“For I am with you, and no one will attack you to harm you, for I have many in this city who are my people.” Acts 18:10.
So long as the Lord had work for Paul to do in Corinth, the fury of the mob was restrained. The Jews opposed themselves and blasphemed; but they could neither stop the preaching of the gospel nor the conversion of the hearers. God has power over the most violent minds. He makes the wrath of man to praise Him when it breaks forth, but He still more displays His goodness when He restrains it; and He can restrain it. “By the greatness of thine arm they shall be as still as a stone, till thy people pass over, O Lord.”
Do not, therefore, feel any fear of man when you know that you are doing your duty. Go straight on, as Jesus would have done, and those who oppose shall be as a bruised reed and as smoking flax. Many a time men have had cause to fear because they were themselves afraid; but a dauntless faith in God brushes fear aside like the cobwebs in a giant’s path. No man can harm us unless the Lord permits. He who makes the devil himself to flee at a word can certainly control the devil’s agents. Maybe they are already more afraid of you than you are of them. Therefore, go forward, and where you looked to meet with foes you will find friends.
அஞ்சாத நம்பிக்கை
நான் உன்னுடனேகூட இருக்கிறேன். உனக்குத் தீங்கு செய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை (அப்.18:10).
பவுல் கொரிந்து பட்டணத்தில் ஆண்டவருக்கென்று வேலை செய்யும்வரை கூட்டத்தினரின் சிற்றம் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. யூதர் தங்களையே எதிர்த்துக்கொண்டு தேவதூஷணம் கூறிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களால் நற்செய்தி போதிக்கப்படுவதையோ கேட்டவர்கள் மனம் மாறினதையோ தடுக்க முடியவில்லை. கோபாவேசமான மனதின்மேல்கூட கடவுளுக்கு வல்லமை உண்டு. மனிதனின் கோபம் வெளிப்படும்போதுகூட கடவுளால் அவன் அவரைத் துதிக்கச் செய்யமுடியும். ஆனால் கோபத்தை அவன் அடக்கும்போது அவரால் நம் சிறப்பை வெளிப்படுத்த முடியும். அவன் கோபத்தை அடக்கச் செய்யவும் அவரால் முடியும். நீர் மீட்ட ஜனங்களே கடந்துபோகும்வரையும், அவர்கள் உம்முடைய புயத்தின் மகத்துவத்தினால் கல்லைப்போல அசைவற்றிருப்பார்கள்.
நீங்கள் உங்கள் கடமையைச் செய்வதாக அறியும்போது எந்த மனிதனுக்கும் பயப்படாதேயுங்கள். இயேசு எவ்விதம் நேராகப் போயிருப்பாரோ அவ்விதமே செல்லுங்கள். உங்களை எதிர்க்கிறவர்கள் நெரிந்தநாணலையும் மங்கியெரிகிற திரியையும்போல ஆகிவிடுவார்கள். பல சந்தர்ப்பங்களில் மக்கள் அச்சங்கொண்டிருந்ததாலேயே அவர்கள் அஞ்சவேண்டியதாயிருக்கிறது. அனால் கடவுள்மேல் கொண்டிருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கை இராட்சதன் பாதையிலுள்ள நூலாம்படை நீக்கப்படுவதைப்போல் அச்சத்தை நீக்கிவிடும். ஆண்டவர் அனுமதி அளிக்காமல் ஒருவரும் நமக்குத் தீங்கு செய்யமுடியாது. பிசாசையோ ஒரு வார்த்தையால், விரட்டக்கூடிய அவர் பிசாசின் அடியார்களையும் கட்டுப்படுத்த முடியும். ஒருவேளை நீங்கள் அவர்களுக்குப் பயப்படுவதற்கு அதிகமாக அவர்கள் உங்களுக்குப் பயப்படலாம். ஆகையால் தைரியமாக முன்னேறிச் செல்லுங்கள். நீங்கள் எதிரிகளை எதிர்பார்த்த இடத்தில் நண்பர்களையே காண்பீர்கள்.
Charles H. Spurgeon